Coimbatore Accident: ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து பயங்கர விபத்து; 3 தொழிலாளர்கள் மரணம்..!
சூறாவளி காற்று வீசியதால் விளம்பர பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
ஜூன் 01, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, புறநகர் பகுதியில் ராட்சத விளம்பர பதாகைக்கான அமைப்பு உள்ளது. இன்று தனியார் உணவகத்திற்கு விளம்பர பலகை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அப்பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியுள்ளது. தொழிலாளர்கள் விளம்பர பதாகையின் மீது இருந்ததால், அது சாய்வது போல தோன்றியுள்ளது. MS Dhoni Surgery Successful: தல தோனிக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது அறுவை சிகிச்சை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இதனால் அனைவரும் அங்கிருந்து விரைந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால், 3 பேரால் அங்கிருந்து தப்பி செல்ல இயலாத சூழ்நிலை ஏற்படவே, அவர்கள் ராட்சத விளம்பர பதாகையில் மாற்றிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்களும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கியோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.