Cuddalore Shocker: மது, கஞ்சா வாங்க பணம் தராததால் ஆத்திரம்; பெற்றெடுத்த தாயின் கழுத்தை நெரித்துக்கொன்ற மகன்.!
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊரில் ஊதாரியாய் சுற்றித்திரிந்த மகன், பணம் கொடுக்காத மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
பிப்ரவரி 28, பண்ரூட்டி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம். இவரின் தாய் முத்துலட்சுமி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மணிவாசகம், கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார். அவரது போதைப்பழக்கத்தை கைவிடக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியும் பலனில்லை. தொடர்ந்து வேலைகளுக்கு செல்லாமல் ஊரைச்சுற்றி, கிடைத்த பணத்தை வைத்து போதைப்பொருளை வாங்கி மணிவாசகம் போதையிலேயே திரிந்துள்ளார். Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

பணம் கொடுக்க மறுத்ததால் தாய் கொலை: இந்நிலையில், சம்பவத்தன்று மணிவாசகம் போதைப்பொருட்கள் வாங்க தாய் முத்துலெட்சுமியிடம் பணம் கேட்டு இருக்கிறார். அவரோ பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது தாயை அவதூறாக பேசிய மணிவாசகம், ஒருகட்டத்தில் அவரை தாக்கி இருக்கிறார். ஆத்திரம் தீராது தாயை கொலை வெறியுடன் தாக்கிய மணிவாசகம், முத்துலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மணிவாசகத்தின் பிடியில் இருந்து அவரை தாயை மீட்டனர்.
குற்றவாளி சிறையில் அடைப்பு: உயிரிழப்பு உறுதியானதால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மணிவாசகமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

