DMK A Mani Victory: திமுக கைவசம் சென்றது தர்மபுரி தொகுதி: தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி.!

18வது மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய ஆ. மணி வெற்றி அடைந்துள்ளார். இது திமுகவினரிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

DMK A Mani Victory: திமுக கைவசம் சென்றது தர்மபுரி தொகுதி: தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி.!
DMK Dharmapuri MP A. Mani (Photo Credit: @KannadhasanKv10 X)

ஜூன் 04, தர்மபுரி (Dharmapuri News): 18வது மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள், ஜூன் 04ம் தேதியான இன்று வெளியாகிறது. 8,320 வேட்பாளர்கள் 543 தொகுதியில் போட்டியிட்டு மக்களின் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர். இன்று காலை முதலாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் தனியே 240 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், கூட்டணியுடன் சேர்த்து 295 தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 231 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இழுபறியில் இருந்த தர்மபுரி தொகுதியும் திமுக வசம் சென்றது. DMK Kanimozhi Victory: தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார் கனிமொழி; கொண்டாட்டத்தில் திமுக.! 

13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: இந்நிலையில், திமுக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 411602 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 13,368 வாக்குகள் வித்தியாசத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணியை தோற்கடித்து திமுக வேட்பாளர் வெற்றி அடைந்துள்ளார். சௌமியா அன்புமணி 15 சுற்று வரை முன்னிலையில் இருந்து வந்த நிலையில், இறுதிசுற்றுகளில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டார். சௌமியா 398234 வாக்குகள் பெற்றிருந்தார்.

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).