Kathir Anand: 5 மணிநேரத்தை கடந்து தொடரும் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜர்..!

5 மணிநேரத்திற்கு மேலாக திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kathir Anand: 5 மணிநேரத்தை கடந்து தொடரும் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜர்..!
Kathir Anand at ED Office On 22 January 2025 (Photo Credit: @Idam_valam / @dmkathiranand X)

ஜனவரி 22, நுங்கம்பாக்கம் (Chennai News): கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (2019 Parliament Election), வேலூர் மக்களவைத் தொகுதியில் (Vellore Lok Sabha Constitutuency) களமிறங்கிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (Kathir Anand), வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் நடந்த சோதனையில், கதிர் ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, காட்பாடியை சேர்ந்த திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் (Poonjolai Srinivasan) வீடு, கதிர் ஆனந்த் வீடு, அவரின் கல்லூரிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது, ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை. இதனால் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்தது. Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.! 

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை:

கடந்த ஜனவரி 03, 2025 அன்று திமுக எம்.பி கதிர் ஆனந்த்தின் காட்பாடி வீட்டில் அமலாக்கத்துறை (ED Raid) சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.75 இலட்சம் ரொக்கம், ரூ.13 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் எம்.பி கதிர் ஆனந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதனால் இன்று காலை (22 ஜனவரி 2025) கதிர் ஆனந்த் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெறுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 22, 2025 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).