Tamilisai Soundararajan: அவுட் ஆப் கண்ட்ரோல் விவகாரம்.. சர்காரியாவை இழுத்துவிட்டு தமிழிசை கடும் தாக்கு..!

தொகுதி வரையறை, ஹிந்தி விஷயம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும், திமுக தலைவர் & முதல்வர் முக ஸ்டாலின், இவ்விசயத்தில் பொருள் புரியாதது போல பிதற்றுவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tamilisai Soundararajan: அவுட் ஆப் கண்ட்ரோல் விவகாரம்.. சர்காரியாவை இழுத்துவிட்டு தமிழிசை கடும் தாக்கு..!
MK Stalin & Tamilisai (Photo Credit: @MKStalin X / YouTube)

ஏப்ரல் 19, சென்னை (Chennai News): தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "பாஜக தலைமையிலான மத்திய அரசின் அடக்குமுறைக்கு திமுக அரசு ஒருபோதும் மடங்காது. தமிழ்நாடு எப்போதுமே டெல்லியில் இருப்போருக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் (Out of Control) தான். எதிர்வரும் 2026 தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி வென்று ஆட்சியை பிடிக்கும்" என பேசி இருந்தார். இந்த விஷயத்துக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. UPI Transactions GST: ரூ.2,000 யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு? நிதியமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

சர்க்காரியா நினைவிருக்கா?

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "1976ல் சர்க்காரியா ஊழல் விஷயத்தில் கேகே ஷாவால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தேசத்துரோக விரோதம், ஊழல் என இரண்டு விஷயங்களுக்கு திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தொகுதி வரையறை, ஹிந்தி திணிப்பு விஷயங்களுக்கு மத்திய அரசு சார்பில் உரிய பதில் வழங்கப்பட்டுவிட்டது. இது தெரிந்தும், தெரியாததுபோல் ஸ்டாலின் பிதற்றுவது ஏன்? அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது இருந்து ஸ்டாலின் பயத்தில் இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மக்களிடம் இருந்து எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருக்கிறார்" என பேசினார்.

ஷா குறித்து முக ஸ்டாலின் பேசிய காணொளி:

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).