Cylinders Wash Away Due To Heavy Rains: புரட்டி எடுத்த மழை.. மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்..!
நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக வெங்கமேடு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள் மழையின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது.
மே 21, கரூர் (Karur News): தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை வீச கூடிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஏற்பட கூடிய மழை ஆகும். இந்த மழையில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டாலும் கூட இந்தியாவின் மொத்த விவசாயத்தில் பெரிய பாதிப்பும், இழப்பும் ஏற்படும். கேரளா முதல் வட இந்தியா, மேற்கு தமிழ்நாட்டில் இதுதான் மழையை கொடுக்கும். கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்த நிலையில்தான் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கும் (Monsoon Forecast) என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. Turkish Delight Recipe: டர்கிஸ் டிலைட் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் மழை புரட்டி எடுத்து வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த கனமழை பெய்தது. நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக வெங்கமேடு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள் மழையின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. சிலிண்டர்கள் மழை நீரால் அடித்து செல்லப்படும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கரூரில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள் #TamilNews pic.twitter.com/3FLIESLWoQ
— Backiya (@backiya28) May 21, 2024
(The above story first appeared on LatestLY on May 21, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

