2024 General Elections Awareness (Photo Credit: @ECI X)

ஏப்ரல் 12, சென்னை (Chennai): இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மக்களவை பொதுத்தேர்தல் 2024 (General Elections 2024) அறிவிப்புகள் வெளியாகி, அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியின் வெற்றிக்காக ஓயாது உழைத்து வருகிறது. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும், பிரச்சார குழுக்களும் வீதிவீதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து வருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 2024 மக்களவை பொதுத்தேர்தலுக்கு 94 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ளனர்.

தமிழ்நாட்டில் (Vote on April 19) ஏப்ரல் 19 தேர்தல்: இந்தியாவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கும் மக்களவை பொதுத்தேர்தல், 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக அறிவிக்கப்படும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக - ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் (Election Comission Of India ECI) செய்துள்ளது. MI Vs RCB Highlights: அடித்து நொறுக்கிய மும்பை; சுக்கு நூறாகிப்போன பெங்களூர்.. அசத்தல் வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி.! 

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு: இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் 16 அடி ஆழமுள்ள நீருக்கடியில் வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியக்குடிமகனாக ஒவ்வொருவரும் நமது ஜனநாயக கடமையை செலுத்துவோம்!

உங்கள் வாக்கு, உங்கள் உரிமை.. அதனை என்றும் விட்டுக்கொடுக்காதீர்கள்!