Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு: விபரம் உள்ளே.!
19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, இந்த மாதத்திற்கு ரூ.14 அளவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வணிக சிலிண்டரின் விலை ரூ.1966 க்கு விற்கப்படுகிறது. வீட்டு சிலிண்டருக்கான விலையில் மாற்றம் இல்லை.
ஜனவரி 01, புதுடெல்லி (New Delhi): சமையல் எரிவாயுக்கான (Gas Cylinder Price Today) விலையை ஒவ்வொரு மாதமும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் பயன்பாடு, உற்பத்தி செலவு, போர்ப்பதற்ற சூழல் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு எரிவாயுக்களுக்கான விலை என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் (Cylinder Price in Chennai), வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை என்பது பெருமளவு ஒவ்வொரு மாதமும் கவனிக்கப்படுகிறது. இன்றைய வானிலை: தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
ஜனவரி மாதம் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைவு:
கடந்த பல மாதங்களாகவே வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வணிக சிலிண்டரின் விலை ரூ.1,980.50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.14.50 குறைக்கப்பட்டு, ரூ.1966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சிலிண்டரின் விலை ரூ.16 உயர்த்தப்பட்ட நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை.
(The above story first appeared on LatestLY on Jan 01, 2025 07:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

