Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. இந்த மாதமும் உச்சக்கட்டம்.!

கடந்த மாதம் ரூ.1903 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, இந்த மாதத்தில் ரூ.61 அளவு உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் விலை ரூ.155 உயர்ந்து இருக்கிறது.

Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. இந்த மாதமும் உச்சக்கட்டம்.!
Gas Cylinder (Photo Credit: @ANI X)

நவம்பர் 01, புதுடெல்லி (New Delhi): சமையல் எரிவாயுக்கான (Gas Cylinder Price Today) விலையை ஒவ்வொரு மாதமும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் பயன்பாடு, உற்பத்தி செலவு, போர்ப்பதற்ற சூழல் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு எரிவாயுக்களுக்கான விலை என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் (Cylinder Price in Chennai), வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை என்பது பெருமளவு ஒவ்வொரு மாதமும் கவனிக்கப்படுகிறது. 2 தோழிகளுடன் சேர்ந்து மனைவி கொடூர கொலை; மருந்தை ஓவர்டோஸாக கொடுத்து கள்ளகாதலுக்காக விபரீதம்., கம்பி எண்ணும் சோகம்.!

வீட்டு சமையல் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:

இந்நிலையில், வீட்டு சமையலுக்கான 14 கிலோ எடை கொண்ட எரிவாயு விலை ரூ.818.50 என்று மாற்றமே இல்லாமல் நீடித்து வருகிறது. அதேவேளையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதத்தை விட ரூ.61.50 உயர்ந்து, ரூ.1964.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1903 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், தற்போது ரூ.61 உயர்ந்து இருக்கிறது. கடந்த 4 மாதத்தில் மட்டும் ரூ.155 என்ற அளவில் வணிக சிலிண்டருக்கான விலை உயர்ந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 01, 2024 06:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).