Gold Rate Today: சட்டென சரிந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!
சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
செப்டம்பர் 15, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வானிலை: தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு.. செப் 16 முதல் பொளக்கப்போகும் கனமழை.!
தங்கம் விலை குறைவு :
தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை மூன்று நாட்களாக மாறாமல் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, கிராம் தங்கம் ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,43,000க்கு விற்பனையாகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 15, 2025 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

