Gold Price: ஒரேநாளில் இரண்டாவது முறை.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 12, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

மே 12ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை காலை, தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தது. 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.165 சரிந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,880க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்த தங்கத்தில் விலை :

இன்று மாலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,750 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலையானது கிட்டத்தட்ட ரூ.2360 குறைந்தது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement