
மே 12, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையாக பாதித்துள்ளது. உலக அளவில் நடைபெற்று வரும் போர்கள், இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில் ரூ.74 ஆயிரத்தை தாண்டியும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், மே 12ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது, இன்று (மே 12) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.165 சரிந்து, கிராம் தங்கம் ரூ.8,880க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) கிராமுக்கு ரூ.1 சரிந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.109க்கும், வெள்ளி கிலோ ரூ.1,09,000க்கு விற்கப்படுகிறது.