Gold Silver Price: நகைப் பிரியர்கள் ஷாக்.. 60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

ரூ.60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை, இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை ஆதரித்து படிக்கவும்.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Planetary Parade 2025: வானில் நிகழப்போகும் ஆச்சரியம்.. ஒரே நேரத்தில் 6 கோள்கள்.. வெறும் கண்களாலேயே எப்படி பார்ப்பது?!

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60 ஆயிரம் சென்று விட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,209-க்கும், ஒரு சவரன் ரூ. 65,672-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement