ஜனவரி 22, புதுடெல்லி (Technology News): சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இது போன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் கோள்கள் ஒரே பார்வையில் சந்திக்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படும். பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் 5 அல்லது 5க்கும் மேற்பட்ட கோள்கள் வருவது அரிதான ஒன்று. அதாவது, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் (Venus, Jupiter, Saturn, Mars, Neptune, Uranus) ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட்டு வருகின்றன. CVV Number: டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண்.. முக்கியத்துவம் என்ன?!
ஒரே நேரத்தில் 6 கோள்கள் (Six Planets Align):
இவற்றில் யுரேனஸ் மற்றும் நெப்டியூனைத் தவிர, மற்ற கிரகங்களை வெற்று கண்ணில் பார்த்தாலே தெரியும். மீதமுள்ள 2 கிரகங்களை பைனாகுலர் அல்லது தொலைநோக்கிகள் மூலம் காணலாம். இந்த நிகழ்வு வானம் தெளிவாக இருக்கும் போது மட்டுமே பார்க்க முடியும். இதை காண்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் இந்த அதிசய நிகழ்வை கண்டு களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.