Gold Silver Price: ரூ.58,000/-ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.59 என்ற அளவுக்கு தங்கத்தின் விலை சென்ற நிலையில், தற்போது மீண்டும் இறங்குமுகத்தை சந்தித்து ஏறுமுகத்தை தொடங்கியுள்ளது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

நவம்பர் 22, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன்-ரஷியா போர் உலகளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குசந்தைகளில் மாற்றம் ஏற்பட்டு பல நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதன் மீதான வரி குறிக்கப்பட்டாலும், கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருக்கிறது. School Holiday: தொடர் மழை எதிரொலி., இராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட உத்தரவு.! 

இன்றைய விலை (Gold Rate Today in Chennai):

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.7,145 க்கும், சவரன் ரூ.57,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,01,100 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சென்னையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, கிராம் தங்கத்தின் விலை ரூ.7,255 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.57,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யபடுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement