Gold Rate Today: இன்று தங்கம் விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

சென்னையில் இன்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today: இன்று தங்கம் விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஜூலை 18, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price), தற்போது ஒரு சவரனுக்கு ரூ.74,000ஐ நெருங்கியுள்ளது. Shocking Video: கஞ்சா போதையில் அரசுப்பள்ளி மாணவர்களை வெட்ட துரத்திய கும்பல்.!

தங்கம் விலை உயர்வு:

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாறும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 18) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

ஜூலை 18ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 18) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,110க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.125 என, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).