Gold Rate Today: மீண்டும் ரூ.75,000 ஐ நெருங்கிய தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.74,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் 05, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வானிலை: இன்று 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!
நாளுக்குநாள் உயரும் தங்கம், வெள்ளி விலை:
தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி ஜூலை மாதத்தில் தொடக்கத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 05ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இன்று (ஆகஸ்ட் 5) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,730 க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000 க்கு விற்பனையாகிறது. சமீபகாலமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380 புள்ளிகள் சரிந்து 80,638 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

