Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.76,000ஐ நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.75,000ஐ கடந்து தற்போது ரூ.76,000ஐ நோக்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.76,000ஐ நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உயர்ந்த தங்கம் விலை :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வானிலை: கடலூர், திருச்சி, திருவள்ளுர் உட்பட 16 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.! 

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :

இன்று (ஆகஸ்ட் 28) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,405 க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,30,000 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ரூ.75,000ஐ கடந்து தற்போது ரூ.76,000ஐ நோக்கி பயணித்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 28, 2025 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).