Gold Rate Today: ரூ.81,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: ரூ.81,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 09, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தங்கம் விலை உயர்வு :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலையானது குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில் செப்டம்பர் 09ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வானிலை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.! 

நேற்றைய தங்கத்தின் விலை :

நேற்று காலை 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,970 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பின் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,060க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,480க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,40,000க்கு விற்பனையானது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், நேற்றைய விலையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,40,000க்கு விற்பனையாகிறது. தங்கம் கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த நிலையில் வெள்ளியும் உயர்ந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 09, 2025 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).