வானிலை: சென்னை, கடலூர், கோவை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு பெரம்பலூர், ஈரோடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக (Weather) வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19 ஆம் தேதி மாலையில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும். வானிலை: சென்னை, வேலூர், தென்காசி உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை.! 

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement