ஆகஸ்ட் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19 ஆம் தேதி மாலையில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும். வானிலை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு.!
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.