Ariyalur Shocker: குடிக்க பணம்கேட்டு தொந்தரவு; மகனின் மது வெறியால், தாய்-தந்தை மனமுடைந்து தற்கொலை.!

திருமணம் செய்துவைத்து வாழாவெட்டியாக திரியும் மகன், மதுவுக்கு பணம் கேட்டு அனுதினம் பெற்றோருக்கு செய்து வந்த கொடுமையால் இறுதியில் அவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட சோகம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

Ariyalur Shocker: குடிக்க பணம்கேட்டு தொந்தரவு; மகனின் மது வெறியால், தாய்-தந்தை மனமுடைந்து தற்கொலை.!
Poison Suicide (Photo Credit: Pixabay)

மார்ச் 17, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள சடையப்பர் தெருவில் வசித்து வருபவர் ராமசாமி (வயது 70). இவரின் மனைவி வளர்மதி (வயது 60). தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட, இரண்டாவது மகன் இளமதிக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இளமதிக்கும் - அவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக, தம்பதிகள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தவித்த இளமதி, அவ்வப்போது மதுபானம் அருந்த தாய்-தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.! 

வயலுக்கு பயன்படுத்தப்படும் விஷம் குடித்து மரணம்: பெற்றோரும் ஒருசில நேரம் வேறு வழியின்றி பணத்தை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மது அருந்த பணம் கேட்டு பெற்றோரிடம் இளமதி தகராறு செய்துள்ளார். மகனின் தொந்தரவால் மனமுடைந்துபோன பெற்றோர், வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் வளர்மதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, ராமசாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், மகனின் குடி வெறியால் மனமுடடைந்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலனை கெடுக்கும், உயிரை காவு வாங்கும்.

(The above story first appeared on LatestLY on Mar 17, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).