College Students 4 Died: கல்லூரி மாணவர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி; படிக்கட்டில் தொங்கி, லாரி சக்கரத்தில் சிக்கி அதிர்ச்சி.! தமிழகமே கண்ணீர்.!
பேருந்துகளில் படிக்கட்டு பயணம் மரணத்தை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினும், போதிய பேருந்துகள் இயக்கப்படாதது, மாணவர்களின் நேரமின்மை, அதிகாரிகளின் அலட்சியம் உட்பட பல்வேறு காரணத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடருகின்றன.
மார்ச் 12, செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுநகலூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் தனியார் பேருந்தில் கல்லூரிக்கு செல்ல படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!
4 பேர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி: இவர்கள் பயணித்த பேருந்தை, கண்டைனர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றதாக தெரியவருகிறது. அச்சமயம் பேருந்து உரசியதில், படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படிக்கட்டில் அடுத்தடுத்து தொங்கிய 5 மாணவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Haiti PM Resign: எதிர்ப்பு குழுவின் மிரட்டல், அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா..!
விசாரணை நடைபெறுகிறது: விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அதனை சீர்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காலை கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர்.
மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன...
(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

