Chennai Shocker: பணிப்பெண் சிறுமி அடித்தேகொலை? உடலெல்லாம் காயம், சிகிரெட் சூடு.. தம்பதி உட்பட 6 பேர் கைது.!

15 வயதுடைய சிறுமி குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. இதில் பலாத்கார சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

Chennai Shocker: பணிப்பெண் சிறுமி அடித்தேகொலை? உடலெல்லாம் காயம், சிகிரெட் சூடு.. தம்பதி உட்பட 6 பேர் கைது.!
Chennai Minor Maid Girl Killed (Photo Credit: @NewsTamil24X7 X)

நவம்பர் 03, அமைந்தகரை (Chennai News): சென்னையில் உள்ள அமைந்தகரை (Aminjikarai), மேத்தா நகரில் வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரின் மனைவி நசியா. நவாஸ் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தம்பதிகளுக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். தம்பதிகளின் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, பணிப்பெண்ணாக (Maid Girl Killed) வேலை பார்த்து வந்துள்ளார்.

சிறுமி மர்ம மரணம்:

இதனிடையே, கடந்த அக்.31 தீபாவளியன்று வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு, குளிக்கச் சென்ற சிறுமி வாயில் நுரைதள்ளிய நிலையில் சடலமாக கிடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. Tiruppur Shocker: "ஐயா காப்பாத்துங்க" கிணத்துக்குள் கேட்ட அலறல் சத்தம்., நள்ளிரவில் பதறவைத்த சம்பவம்.! 

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

உடலெல்லாம் காயங்கள்:

சிறுமியின் உடலில் சிகிரெட் சூடு, அடித்து துன்புறுத்தப்பட்டதற்கு அடையாளம் இருந்ததால், தம்பதிகளான கணவன் - மனைவியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காவல்துறையினரும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

6 பேர் கைது:

தற்போது வரை இந்த விவகாரத்தில் தம்பதிகள் முகமது நவாஸ் - நசீயா, அவர்களின் நண்பர் லோகேஷ், ஜெய்சக்தி, பணிப்பெண் ஒருவர் என மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு தலித் அமைப்புகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஒருபக்கம் சிறுமியின் கொலையை மூடிமறைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).