Aged Woman Killed: பணம், நகைக்காக 68 வயது மூதாட்டி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை; தம்பதி பகீர் செயல்.. சென்னையில் பயங்கரம்.!

கடந்த 5 ஆண்டுகளாக மூதாட்டியை அன்னைபோல கவனித்து வந்த நிலையில், பணம்-நகை மீது ஆசைகொண்ட தம்பதி செய்த படுபயங்கர செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. கலியுகத்தில் கள்ளமில்லா அன்பை விரும்பிய மூதாட்டியை கூறுபோட்டு கொன்ற தம்பதியின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

Aged Woman Killed: பணம், நகைக்காக 68 வயது மூதாட்டி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை; தம்பதி பகீர் செயல்.. சென்னையில் பயங்கரம்.!
Vijaya, Age 68 (Photo Credit: Facebook)

ஜூலை 28, எம்.ஜி.ஆர் நகர் (Chennai News): சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் (MGR Nagar, Chennai) பகுதியில் வசித்து வரும் மூதாட்டி விஜயா (வயது 68). இவர் கடந்த ஜூலை 17ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். இவரை காணாது பரிதவித்த குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பத்திரிகை, சமூக வலைத்தளங்களிலும் மூதாட்டி (68-Year-Old Lady Killed in Chennai) குறித்த தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

மூட்டைக்கட்டி வீசிய கொடூரம்:

காவல்துறையினர் மூதாட்டியை 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தேடி வந்துள்ளனர். இதனிடையே, மாயமான மூதாட்டியை நகைக்காக கொலை செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது. கடந்த ஜூலை 18ம் தேதி நள்ளிரவு நேரத்தில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பார்த்தீபன் (வயது 32) என்வரின் வீட்டில் இருந்து மூட்டை ஒன்று வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. குடும்பத்தினர் உதவியுடன் மூட்டையை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டவர், சென்னையின் பல இடங்களில் கொண்டு சென்றுள்ளார். Teenager Dies By Suicide: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!

கணவன்-மனைவி அதிர்ச்சி செயல்:

இறுதியாக சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றுப்பகுதியில் மூட்டை வீசப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் மூட்டையை பிரித்து பார்த்தபோது மூதாட்டி பல துண்டுகளாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து பார்த்தீபனை தனிப்படை அமைத்து அதிகாரிகள் தேடி வந்த நிலையில், விருதுநகரில் (Virudhunagar) பதுங்கியிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பார்த்தீபனுடன் அவரின் மனைவி சங்கீதாவும் (வயது 28) கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். கூலிவேலை செய்து வந்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 2 சவரன் நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருக்கிறது.

மூதாட்டி நகை மற்றும் பணம் என வாழ்ந்து வந்த நிலையில், பக்கத்து வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த பார்த்தீபன் பணத்திற்காக கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகள் சென்னை வந்தபின் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 28, 2024 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).