Chennai Shocker: போதையில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்; இரயில் நிலையத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்.!
அனுதினமும் மக்கள் அதிகம் வரும் இரயில் நிலையத்தில், போதை கும்பல் பொதுமக்களை தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பட்டாபிராமில் நடந்துள்ளது.
நவம்பர் 26, பட்டாபிராம் (Chennai News): சென்னையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள், இரயில் மற்றும் பேருந்து பயணங்களின்போது ரூட்டு தல என்ற பெயரில் அட்டகாசம் செய்து வந்தது அதிகம் நடந்து வந்தது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சென்னை காவல்துறை மற்றும் இருப்புப்பாதை காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட மாநிலக்கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொலையும் செய்யப்பட்டார். Youth Killed by Father & Son: "என் அன்பு மகள் இறப்புக்கு நீதானே காரணம்? அவகூடயே போ" - கோவையில் தந்தை-மகன் பயங்கர செயல்..! இளைஞர் கொலை.!
காவல்துறையினர் விசாரணை:
இதனிடையே, சென்னையில் உள்ள பட்டாபிராம், இந்து கல்லூரி இரயில் நிலையத்தில், போதையில் இளைஞர்கள் பொதுமக்களை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இவர்களின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வீடியோ பதிவுகளின் அடிப்படையில், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருபக்கம் காவல்துறையினர் போதைப்பொருட்களை ஒழிக்க தீவிர முயற்சி எடுக்க, மற்றொரு பக்கம் போதை இளைஞர்கள் செய்யும் அடாவடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் கும்பல் செய்யும் அட்டகாசங்கள் காணொளி:
சென்னை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதையில் இளைஞர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகளை தாக்கும் வீடியோ. இவர்கள் மீது @tnpoliceoffl நடவடிக்கை எடுக்கும்? pic.twitter.com/dBCoXKIduv
— தங்க.காளிப்பாண்டி () November 25, 2024
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

