6-Year-Old Girl Rape: 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; புரட்சி பாரதம் கட்சிப்பிரமுகர் போக்ஸோவில் கைது.!
பச்சிளம் சிறுமியான 6 வயது மகளை பலாத்காரம் செய்த அரசியல்கட்சி பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 24, புளியங்குப்பம் (Chennai News): சென்னையில் உள்ள புளியங்குப்பம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, நேற்று இரவு நேரத்தில் கீழே விழுந்து காயமடைந்ததாக ரத்த காயத்துடன் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது பாலியல் ரீதியாக சிறுமி துன்புறுத்தலை எதிர்கொண்டது தெரியவந்ததது. இதனால் மருத்துவர்கள் குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமி மற்றும் அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் அதிர்ச்சியூட்டும் அளவிலான பகீர் தகவல் வெளியானது. அதாவது, சிறுமியை அவரின் சொந்த தந்தையே பலாத்காரம் செய்தது தெரியவந்தது. Namakkal Shocker: பள்ளி வளாகத்தில் நடந்த தகராறில் 16 வயது மாணவர் அடித்துக்கொலை; சக மாணவர் அதிர்ச்சி செயல்.!
போக்ஸோவில் கைது:
சிறுமி மற்றும் அவரின் தாயிடம் வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர், குற்றவாளியான ரவி என்ற புருஷோத்தமனையும் கைது செய்தனர். விசாரணையில், புருசோத்தமன் புதுச்சேரி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. ரவியின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை, அவரின் இரண்டாவது மனைவி பராமரித்து வரும் சூழலில் கொடூரம் நடந்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துவந்தபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் புளியந்தோப்பு காவல்துறையினர் ரவியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவி அங்கன்வாடி ஊழியராகவும் வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

