Chennai News: மதுபோதையில் வளைகாப்பு வீட்டில் நடந்த சோகம்.. பறிபோன உயிர்.!

மதுபோதையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Chennai News: மதுபோதையில் வளைகாப்பு வீட்டில் நடந்த சோகம்.. பறிபோன உயிர்.!
Soolaimedu Baby Shower Function Death Case (Photo Credit: YouTube)

மே 05, சென்னை (Chennai News Today): சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தம்பதியின் உறவினரான இளைஞர் பினிஷ் என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தனது சித்தப்பா - சித்தியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சமீபத்தில் சூளைமேடு வந்திருந்தார். வளைகாப்பு கொண்டாட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. 7-Year-OId Girl Dies of Rabies: 7 வயது சிறுமி ரேபிஸ் தொற்றால் மரணம்; கலங்கவைக்கும் சோகம்.! 

மாடியில் இருந்து தவறி விழுந்து சோகம்:

இந்நிலையில், மதுப்பழக்கம் கொண்ட பினிஷ் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து மதுபானம் அருந்தி பின் அங்கேயே உறங்கி இருக்கிறார். இரவில் உருண்டு-பிரண்டு உறங்கியவர் 2 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயத்துடன் இருந்தவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).