Breaking: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவர் சென்னையில் கைது.. என்ஐஏ ரெய்டில் அதிரடி.!

15 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு தலைவராக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவர் சென்னையில் கைது.. என்ஐஏ ரெய்டில் அதிரடி.!
NIA Raid Tamilnadu on 28 January 2025 (Photo Credit: @DonUpdates X)

ஜனவரி 28, சென்னை (Chennai News): தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், திருபுவனம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (Pattali Makkal Katchi) நிர்வாகி ராமலிங்கம் (Ramalingam Murder Case), கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குதொடர்பான விசாரணை என்ஐஏ வசம் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது இவ்வழக்கில் தொடர்புடையவர்களுடன், பயங்கரவாத தொடர்பில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று சென்னை, மயிலாடுதுறை மாவட்டத்தின் 15 இடங்களில் என்ஐஏ (NIA Raid Today) சோதனை நடத்தி வந்தது.

என்ஐஏ அலுவலகம் அமைத்த பகுதியிலேயே அதிர்ச்சி செயல்:

இந்நிலையில், வாட்சப், டெலகிராம் குரூப் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத பிரிவுக்கு ஆட்சேர்க்கை நடத்திய மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதிகளில் வசித்து வந்த அல்பாசித் என்பவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து மூளைச்சலவை செய்து ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அவரின் வீட்டில் இருந்து ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், என்.ஐ.ஏ அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியிலேயே இவர் ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆட்சேர்க்கை நடத்தி இருக்கிறார்.

இஃமா சாதிக் வழியில் அல்பாசித்:

முன்னதாக சென்னையை சேர்ந்த இஃமா தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வந்த நிலையில், அவர் தன்னிடம் பயிற்சிபெறவந்த மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து பயங்கரவாத குழுக்களுக்கு ஆட் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதன்பேரில் நடைபெற்று வந்த விசாரணையில், இஃமா சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரின் வழியை பின்பற்றிய நபர் அல்பாசித்தும் கைது செய்யப்பட்டுள்ளார். அல்பாசித் தமிழ்நாடு மாநில ஐஎஸ்ஐஎஸ் பிரிவின் அமீராகவும் (தலைவர்) செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).