Coimbatore: கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம்... சிரித்தபடி மன்னிப்பு கேட்டதால் இளைஞர் அதிர்ச்சி செயல்.!
இருசக்கர வாகனம் தவறுதலாக மோதியதால், புன்னகைத்தபடி மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவியை துரத்திச் சென்று முத்தம் கொடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜனவரி 30, குனியமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில், பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் வந்தார். குனியமுத்தூர் பகுதியில் சென்றபோது, சாலை குண்டும்-குழியுமாக இருந்துள்ளது. அச்சமயம், மாணவியின் இருசக்கர வாகனம் பள்ளத்தில் ஏறி-இறங்கியது. இதில் அவரின் வாகனம் நிலைதடுமாறியுள்ளது.
இருசக்கர வாகனம் மோதல்:
அப்போது, அதே வழியில் வந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில், கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனம் மோதி இருக்கிறது. இந்த சம்பவத்தில், மாணவி இளைஞரிடம் சிரித்தபடி மன்னியுங்கள் என கூறியுள்ளார். பின் அவர் வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இவ்விஷயத்தில் மாணவி சிரித்தபடி மன்னிப்பு கேட்டது, இளைஞருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த நபர், மாணவியை பின்தொடர்ந்து துரத்தி சென்றுள்ளார். Watch Video: அதிமுக பிரமுகரை துடைப்பத்தால் நொறுக்கிய பெண்கள்.. பாலியல் தொல்லை கொடுத்ததால் சம்பவம்.!
மாணவிக்கு முத்தம்:
பின் மாணவியை நடுவழியில் நிறுத்தியவர், அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமியின் கை, கழுத்து பகுதில் கொடுத்ததாக தெரியவருகிறது. இதனால் அதிர்ந்துபோன மாணவி அலறவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் தப்பிச் சென்றார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணமான நபர் கைது:
புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டது கோயம்புத்துர் மாவட்டம் புதூர், சக்தி விநாயகர் கோவிலில் தெருவில் வசித்து வரும் அப்துல்லா என்பவரின் மகன் முகமது ஷெரீப் (32) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன் இருக்கின்றனர். இந்த சர்ச்சை செயலைத் தொடர்ந்து காவல்துறையினர் செரீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சென்றுவிட, அவரை வழியச் சென்று விரட்டி முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
மாணவிக்கு முத்தம் கொடுத்த முகமது கைது செய்யப்பட்டார்:
இருசக்கர வாகனம் தவறுதலாக மோதியதால், புன்னகைத்தபடி மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவியை துரத்திச் சென்று முத்தம் கொடுத்த இளைஞர்..
திருமணமாகி மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தவர் அதிர்ச்சி செயல்.. #Coimbatore | @latestly | #LatestLY_Tamil pic.twitter.com/rpzAd7QNYH
— Sriramrpckanna (@Sriramrpckanna1) January 30, 2025
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

