Car Ran Into The Temple: காருக்கு பூஜை போட கோவிலுக்கு காரில் வந்த நபர்.. கட்டுபாட்டை இழந்து கோவிலுக்குள் புகுந்த கார்.. வைரலாகும் வீடியோ..!
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட கார், கோயிலுக்கு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மே 08, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் (Srimushnam) ஸ்ரீ பூவராக சுவாமி கோவிலில் அரியலூர் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தான் வாங்கிய புதிய மாருதி சுசுகி வாகனத்தை பூஜை போட்டு வாகனத்தை எடுக்க முற்பட்டபோது சுதாகர் தவறுதலாக பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் சொகுசு வேன் திடீரென கட்டுப்பட்டை இழந்து கோவில் உள்ளே நுழைந்து மண்டபத் தூணில் இடித்து நின்றது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Russian President Vladimir Putin: "என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம்.." 5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்..!
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட கார், கோயிலுக்கு பாய்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #TamilNews #Cuddalore pic.twitter.com/g5uVsGn6Uo
— Backiya (@backiya28) May 8, 2024
(The above story first appeared on LatestLY on May 08, 2024 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

