Man Kills Pregnant Wife: கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவன்... திண்டுக்கல்லில் பரபரப்பு..!

திண்டுக்கல்லில் மது போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Kills Pregnant Wife: கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவன்... திண்டுக்கல்லில் பரபரப்பு..!
Man Kills Pregnant Wife (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, திண்டுக்கல் (Dindigul): திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன். இவருக்கும் நத்தம் கல்வேலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தாய் வீட்டிற்கு தனது கணவனுடன் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது போதையில் இருந்த பாண்டியன், ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து மனைவியை காலால் எட்டி உதைத்து தள்ளியுள்ளார். இதில் வளர்மதி பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கர்ப்பிணிப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Import Duty On Mobile Phone Slashed: மத்திய பட்ஜெட் 2024.. மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு..!

மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று, வரதட்சனையாக மாமனாரிடம் பைக் வாங்கித் தர கேட்பதற்காக கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு பேருந்தில் சென்று இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வரதட்சணை விவகாரத்தில் கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுயில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).