School Girl Dies: காய்ச்சலுடன் தேர்வெழுத வந்த மாணவி, மயங்கி விழுந்து மரணம்; ஈரோட்டில் சோகம்.!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி, லேசாக உடல்நலம் தேறியதும் பள்ளிக்கு தேர்வெழுத வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Classroom | Death | Both File Pic (Photo Credit: Pixabay)

அக்டோபர் 24, பவானி (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, தேவகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தி. இவர் பருவாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஆத்கர்ஷ் வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ (Adharsh Vidhyalaya Public School) பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஹரிணி (வயது 13). சிறுமி அதே பள்ளியில் (8th Class Girl Student Dies) எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

காய்ச்சலுக்கு பின் பள்ளிக்கு வருகை:

இதனிடையே, கடந்த சில நாட்களாகவே தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் லேசாக அவரின் உடல்நலம் தேறிய நிலையில், பள்ளியில் மாதாந்திர தேர்வு நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று அவர் பரீட்சை எழுத பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அரிசி பைக்குள் ரூ.15 இலட்சம்.. வாடிக்கையாளருக்கு அடித்த ஜாக்பாட்?.. காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்.! 

உயிரிழப்பு உறுதி:

அவர் தேர்வெழுதிக்கொண்டு இருக்கும்போதே திடீரென மயங்கிவிட, உடனடியாக பிற ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில், சிறுமி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.