Krishnagiri Shocker: சொத்து தகராறில் அண்ணண்-அண்ணி கொடூர கொலை.. தீபாவளியன்று பயங்கரம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!

ஊரே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டு இருந்த வேளையில், நிலத்தகராறில் ஆத்திரத்தில் இருந்த தம்பி தனது அண்ணண்-அண்ணியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Murder Blood (Photo Credit: Pixabay)

நவம்பர் 01, பாப்பாரப்பட்டி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம், தலைவாசல் நகரில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 37). இவரின் மனைவி ருக்மணி (வயது 30). மாரிமுத்துவின் சகோதரர் முருகன் (வயது 28). சகோதரர்களான மாரிமுத்து - முருகன் இடையே நிலம் தொடர்பாக முன்விரோத பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அவ்வப்போது இரண்டு குடும்பத்தினரும் வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

அண்ணண்-அண்ணிக்கு (Krishnagiri Couple Killed Over Land Dispute) கத்தியால் சரமாரி வெட்டு:

பின் அவர்களாகவே சமாதானமாக இருந்து, பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனிடையே, நேற்று இரவில் சுமார் 9 மணிக்கு இளையவர் முருகன், மூத்தவரான அண்ணண் மாரிமுத்துவின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அங்கு மாரிமுத்து, அவரின் மனைவி ருக்மணி ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன அக்கம்-பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வானிலை: 19 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அலர்ட்.! 

இருவரும் உயிரிழப்பு:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிருக்கு இரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டு இருந்த கணவன் - மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், இருவரும் உயிரிழந்தது அம்பலமானது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவானவருக்கு வலைவீச்சு:

தீபாவளி அன்று கிருஷ்ணகிரியில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. தலைமறைவான முருகனுக்கு சாம்பல்பட்டி காவல்துறையினர் வலைவீசி இருக்கின்றனர்.