Thirumangalam Shocker: பெண்ணின் ஆடை இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி; ஆயில் மில்லில் நடந்த சோகம்.!

இயந்திரத்திற்குள் ஆடை சிக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.

Thirumangalam Shocker: பெண்ணின் ஆடை இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி; ஆயில் மில்லில் நடந்த சோகம்.!
Thirumangalam Oil Mill (Photo Credit: Facebook)

அக்டோபர் 21, திருமங்கலம் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், வாகைக்குளம் பிரிவில் ஆர்எம்எஸ் எண்ணெய் (Thirumangalam Oil Mill Death) மில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பெண் ராமுத்தாய். இவர் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். Thiruvarur Shocker: கர்ப்பிணி பெண் அதிக இரத்தப்போக்கால் உயிருக்கு போராடி பலி; திருவாரூரில் கண்ணீர் சோகம்.! 

ஆடை சிக்கி சோகம்:

இதனிடையே, நேற்று பணியின்போது ராமுத்தாயின் ஆடை இயந்திரத்தில் சிக்கி இழுத்துள்ளது. இந்த சம்பவத்தில் இயந்திரத்திற்குள் விழுந்தவர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை:

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தி பணியாளர்கள், பெண்ணின் மரணத்தை உறுதி செய்ததைத்தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமுத்தாயின் மரணத்தை அறிந்து வந்த உறவினர்கள், கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 08:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).