Beetles Attack: கிடாவெட்டுக்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த பயங்கரம்; கதண்டுகள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி.!
கதண்டுகள் விஷயத்தில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில், அது மரணத்திற்கும் வழிவகை செய்யும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
செப்டம்பர் 09, நாமக்கல் (Namakkal News): உறவினர்களுடன் கிடா வீட்டுக்கு சென்று, நேர்த்திக்கடனை தீர்க்க காத்திருந்தவரின் மூச்சு இறுதியாகிப்போன சோகம் குறித்த பதைபதைப்பு தகவலை தருகிறது இந்த செய்தித்தொகுப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்கப்பட்டி கிராமத்தில் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுதாகர் என்பவர் தனது வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, கிடா வெட்டி சாமி வழிபாடு செய்துள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள மரத்தின் மீது கதண்டுகள் (Beetles Attack) கூடுகட்டியிருந்த நிலையில், அவைகள் சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமைக்க மூட்டிய தீயின் புகையில் சிக்கியதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, கதண்டுகள் கூட்டமாக திரண்டு வந்து சுதாகர் மற்றும் அவரின் உறவினர்களை தாக்கியுள்ளது. அனைவரும் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். Sabja Seeds health benefits: சப்ஜா விதைகளின் நற்பலன்கள்: பயன்படுத்த மிக சுலபம்: ஆனால் பலன்களோ ஏராளம்.!
இவர்களில் சுதாகர் மட்டும் கோவிலுக்கு புறப்பட்டு சென்று உறவினர்களை வரவேற்று இருக்கிறார். அங்கு திடீரென சுதாகருக்கு வாந்தி & மயக்கம் ஏற்படவே, அவர் மீண்டும் மருத்துவமனைக்கு உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சுதாகரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். கதண்டுகள் தாக்கி சிகிச்சையில் இருந்தபோதே, அவர் அலட்சியமாக செயல்பட்டது மரணத்திற்கு விளைவாக அமைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கதண்டுகளை பொறுத்தமட்டில், அவை தேனீக்களை விட அளவில் பெரியதாகவும் விஷத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆகையால், தேனீ கொட்டினால் கூட சிலர் அலட்சியமாக கடந்து சென்று இருப்பார்கள்.
ஆனால், கதண்டுகள் விஷயத்தில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில், அது மரணத்திற்கும் வழிவகை செய்யும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Sep 09, 2023 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

