Namakkal Shocker: கள்ளகாதலுக்காக 4 வயது சிறுமி கொலை; 21 தாயின் அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!

தனது கள்ளக்காதல் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்த குழந்தையை தாய் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்த பயங்கரம் நாமக்கல்லை அதிரவைத்துள்ளது.

Namakkal Shocker: கள்ளகாதலுக்காக 4 வயது சிறுமி கொலை; 21 தாயின் அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!
Dead Body (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, பரமத்தி வேலூர் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், காந்திபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையன் (வயது 25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சினேகா (வயது 21). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் பூவரசி என்ற 4 வயது குழந்தை இருக்கிறது. இதனிடையே, சினேகாவிற்கும்- அதே பகுதியில் வசித்து வந்த சரத்குமார் (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் பல நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சினேகாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது. Trichy Shocker: நூடுல்ஸ் சாப்பிட்ட 16 வயது சிறுமி மரணம்; திருச்சியில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.! 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொடூரம்:

இதனால் முத்தையன் காவல் நிலையத்தில் சென்று முறையிட, அங்கு அதிகாரிகள் சினேகாவுக்கு அறிவுரை கூறி இருக்கின்றனர். மேலும், அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று நடந்த பேச்சுவார்த்தையில், அவர் தனது கணவருடன் இனி வசிப்பதாக கூறியுள்ளார். பின் முத்தையன் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் வீட்டிற்கு செல்ல நாமக்கல் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். நாமக்கல் பேருந்து நிறுத்தத்தில் கணவரின் கண்களில் மண்ணைத்தூவி தப்பிய சினேகா, தனது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். அங்கிருந்து பரமத்தி வேலூர் (Paramathi Velur), சேலூர், செல்லப்பம்பாளையம் கிராமத்தில் இருக்கும் உறவினர் கோகிலா (40) என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்

இருவர் கைது:

மதிய நேரம் வீட்டில் உறங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு கிணற்றுக்கு சென்ற சினேகா, குழந்தையை கிணற்றில் வீசி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், பரமத்தி வேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீயணைப்பு படையினரின் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சினேகாவை கைது செய்த நிலையில், அவருக்கு குழந்தையை கொலை செய்யும் ஆலோசனை வழங்கிய உறவினர் கோகிலாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 02, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).