Salem Shocker: பீரோ பட்டறை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக்கொலை; சேலத்தில் பயங்கரம்.!

பட்டறைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த நபர், மர்ம கும்பலால் வழிமறித்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தை அதிரவைத்துள்ளது. நடுரோட்டில், இன்று காலை இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Salem Shocker: பீரோ பட்டறை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக்கொலை; சேலத்தில் பயங்கரம்.!
Ayothiapattinam Murder on 08-Nov-2024 | Murder File PIc (Photo Credit: @NewsTamil24X7 / Pixabay)

நவம்பர் 03, காரிப்பட்டி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, அயோத்தியாபட்டினம், வெள்ளியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 40). இவர் ரௌடி எனவும் கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக வெள்ளாளன்குண்டம், வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறையும் செயல்பட்டு வருகிறது. இதனால் உள்ளூரில் பீரோ சரவணன் எனவும் இவர் அறியப்பட்டுள்ளார்.

காரை மறித்து கொலை:

இதனிடையே, இன்று காலை சரவணன் தனது வெள்ளாலகுண்டம் பட்டறைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம், சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பனங்காடு பகுதியில், காலை சுமார் 08:30 மணிக்கு மேல் இவரின் கார் மீது வேறொரு கார் வந்து மோதியுள்ளது. இதனால் சரவணன் காரை நிறுத்திய நிலையில், வேறொரு காரில் வந்த கும்பல் சரவணனை வாகனத்தில் இருந்து கீழே இழுத்துபோட்டுள்ளது. Sekar Babu: "தாமரை மலரக்கூடாது விவகாரம்" - அமைச்சர் சேகர்பாபு புதிய விளக்கம்.! 

காவல்துறை விசாரணை: 

பின் அவரை கத்தி, அரிவாள், வாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக தாக்கிய கும்பல், முகத்தை கடுமையாக சிதைத்து கொலை செய்தது. கொலை சம்பவத்தையடுத்து, அக்கம் பக்கத்தினர் கூடத்தொடங்கியதால் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த விஷயம் தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதத்தால் கொலை என சந்தேகம்:

மேலும், சரவணனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், காட்டூர் ஆனந்தன் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவான கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).