Thanjavur Shocker: காதல் திருமணம் செய்த 3 நாளில் நடந்த கொடூர கொலை: சாதிய பிரச்சனையால் நடந்த பயங்கரம்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆசை ஆசையாய் காதலித்து, புத்தாண்டு அன்று நண்பர்கள் முன்னிலையில் காதலியை இளைஞர் கரம்பிடித்த நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த அதிர்ச்சி தமிழகத்தையே பதறவைத்துள்ளது. சாதிய ஆணவத்தால் பறிக்கப்பட்ட பெண்ணின் உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Thanjavur Shocker: காதல் திருமணம் செய்த 3 நாளில் நடந்த கொடூர கொலை: சாதிய பிரச்சனையால் நடந்த பயங்கரம்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்..!
Couple Naveen - Aishwarya (Photo Credit: @Neelam_Culture X)

ஜனவரி 9, பட்டுக்கோட்டை (Thanjavur Crime News): தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை, பூவாலூர் கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இதே கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஐஸ்வர்யா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே பள்ளிப்பருவத்தில் இருந்து ஏற்பட்ட பழக்கமானது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

சொந்த ஊரில் பயம், வெளியூரில் தடையில்லாத காதல்: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக நவீன் திருப்பூர் சென்ற நிலையில், அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் நவீன் அங்கேயே பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவையும் திருப்பூருக்கு வரவழைத்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்த்து இருக்கிறார். தங்களின் சொந்த ஊரில் பல பிரச்சனைகளுக்கு நடுவே பயந்து காதலித்த ஜோடி, திருப்பூரில் தங்களது காதலை எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்திருக்கிறது.

புத்தாண்டு இரவில் திடீர் திருமணம்: அதோடுமட்டுமல்லாது திருமணமும் செய்து கொள்ள முடிவெடுத்த காதல் ஜோடி, டிசம்பர் 31 அன்று அங்குள்ள நண்பர்களின் வீட்டில், நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளது. திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் நவீன் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஐஸ்வர்யாவின் பெற்றோர் கவனத்திற்கும் சென்ற நிலையில், அவர்கள் தங்களது மகளை காணவில்லை என பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். Sheetal Devi Receives Arjuna Award: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் அர்ஜுனா விருது பெற்றார் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி: கொண்டாடும் இந்தியர்கள்.! 

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

மகளை அழைவந்த பெற்றோர்: இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காதல் திருமணம் தெரியவந்ததையடுத்து, தம்பதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். காவல் நிலையத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பின், ஐஸ்வர்யாவை தங்களின் சொந்த ஊருக்கு அவரின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மனைவியை பிரிய மனமில்லாத நவீன், காரை பின்தொடர்ந்தவாறு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

புதுமணப்பெண் மர்ம மரணம்: ஊருக்கு சென்ற ஐஸ்வர்யா குறித்து எந்த விதமான தகவலும் கிடைக்காத நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எதுவும் நவீனுக்கு தெரியப்படுத்தாமல், அங்குள்ள சுடுகாட்டில் மகளின் சடலத்தை பெற்றோர் வைத்து இறுதி சடங்கு செய்து எரித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு செல்ல முயன்ற நவீனையும் ஐஸ்வர்யாவின் உறவினர்களால் தாக்கி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் நவீன் வட்டாத்திகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆணவக்கொலையா?: மேலும், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமறைவாக இருப்பதால், காதல் திருமண விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை தேடியும் வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).