Theni Accident: போதை, அதிவேகத்தில் சோகம்.. இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நண்பர்கள் மூவர் பலி.!

தீபாவளியன்று மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் அமைதியாக இருக்காமல், இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் ஊரைச்சுற்றியவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

Theni Accident: போதை, அதிவேகத்தில் சோகம்.. இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நண்பர்கள் மூவர் பலி.!
Theni Accident Death on 31-Oct-2024 (Photo Credit: @News18Tamilnadu X)

நவம்பர் 01, கம்பம் (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் (Cumbum Accident 3 Youths Died) - கூடலூர் சாலையில், அப்பாச்சி பண்ணை பகுதியில் நேற்று நடந்த கோர விபத்தில் நண்பர்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட பயங்கர விபத்தில் (Theni Accident), ஒரே இருசக்கர வாகனத்தில் விதியை மீறி பயணம் செய்த கூடலூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் லிங்கேஷ் என்ற லிங்கேஸ்வரன் (வயது 24), சேவாக் (வயது 24), சஞ்சய் (வயது 22) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Krishnagiri Shocker: சொத்து தகராறில் அண்ணண்-அண்ணி கொடூர கொலை.. தீபாவளியன்று பயங்கரம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.! 

நண்பர்கள் மூவர் பலி., 2 பேர் படுகாயம்:

இவர்கள் இருதரப்பும் இருசக்கர வாகனத்தில், போதையில் அதிவேகத்தில் பயணம் செய்ததே விபத்திற்கு வழிவகை செய்துள்ளது. தீபாவளி என்பதால் போதையை ஏற்றிவிட்டு அதிவேகத்தில் ஊரை சுற்றலாம் என புறப்பட்ட நண்பர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு வாகனத்தில் வந்த மோனிஷ், கேசவன் ஆகியோர் மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து கூடலூர் வடக்கு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Nov 01, 2024 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).