Mother in Law Killed: மனைவியின் கள்ளக்காதல் தகராறில், மாமியாரை குத்திக்கொன்ற இளைஞர்; பொன்னேரியில் பரபரப்பு.!

ஓராண்டாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், கள்ளகாதலருடன் மனைவி ஓட்டம் பிடித்த காரணத்தால் கணவர் ஆத்திரத்தில், தனது சொந்த மாமியாரை குத்திக்கொன்றார்.

Mother in Law Killed: மனைவியின் கள்ளக்காதல் தகராறில், மாமியாரை குத்திக்கொன்ற இளைஞர்; பொன்னேரியில் பரபரப்பு.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

ஜூன் 09, பொன்னேரி (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி (Ponneri Crime News), வெண்பாக்கம், பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் லதா (வயது 40). இவரின் மகள் சௌமியா (வயது 22). கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவேக் (வயது 32). விவேக்கிற்கும் - சௌமியாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்திற்கு பின் கள்ளக்காதல்: தம்பதிகள் இருவரும் 2 ஆண்டுகளாக இணைபிரியாது குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கணவர் விவேக்கை பிரிந்த சௌமியா, ஓராண்டாக தாயாருடன் வசித்து வருகிறார். இதனிடையே, சௌமியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. Israel Airstrike on Gaza: 4 பேருக்காக 200 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்.. பகீர் விபரம் உள்ளே.! 

ஓட்டம் பிடித்த இளம்பெண்: இந்த விவகாரம் சௌமியாவின் தாய் லதாவுக்கு தெரியவரவே, அவர் தனது மகளை கண்டும்-காணாது இருந்துள்ளார். இதற்குள் தான் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக புறப்பட்ட சௌமியா, கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார். இந்த தகவல் அறிந்த விவேக், நேற்று இரவில் மாமியாரின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

மாமியார் குத்திக்கொலை: இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த விவேக், தனது மாமியாரை கத்தியால் குத்தி இருக்கிறார். இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த லதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் நடந்த சோதனையில், லதா வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குற்றவாளி கைது: மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரியவரவே, மாமியார் லதாவை குத்திக்கொலை செய்த விவேக்கின் மீது வழக்குப்பதிந்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).