Thoothukudi Shocker: ஓய்வூதிய பணம் ரூ.40 இலட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்த கணவன் கொலை; பணத்திமிரில் கொடுமைப்படுத்தியதால் பயங்கரம்.!

பல ஆண்டுகளாய் உழைத்து சம்பாதித்து, அரசின் திட்டத்தால் சேமித்து வைக்கப்பட்டு இருந்த தொகையை ஓய்வுக்கு பின்னர் குடும்ப செலவு மற்றும் பராமரிப்புகளுக்கு பயன்படுத்தல் ஊதாரித்தனமாக செலவழித்து வந்த கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Thoothukudi Shocker: ஓய்வூதிய பணம் ரூ.40 இலட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்த கணவன் கொலை; பணத்திமிரில் கொடுமைப்படுத்தியதால் பயங்கரம்.!
Vasantha & Suresh Kumar (Photo Credit: Facebook)

பிப்ரவரி 26, ஓட்டப்பிடாரம் (Thoothukudi Crime News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மனைவி வசந்தா. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது ஜெயராஜ் - வசந்தா தம்பதியுடன், அவரின் மூன்றாவது மகன் சுரேஷ் குமார் வசித்து வருகிறார்.

ஓய்வூதிய பணத்தில் தனியாக ஆடம்பர செலவுகள்: தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த ஜெயராஜுக்கு, பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் உட்பட பிற அரசின் சேமிப்புகள் என ரூ.40 இலட்சம் பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை குடும்பத்தினரிடம் கொடுக்காத ஜெயராஜ், தொடர்ந்து தனது ஆடம்பர செலவுகளை மட்டும் செய்து வந்துள்ளார். Couple Captured by Relations of Illegal Affair: கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த அரசியல்கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய பெண்ணின் உறவினர்கள்.! ஐயோ அம்மா கதறல்..! 

மகன், மனைவியை தாக்கி கொடுமை: இதுகுறித்து கேட்டதற்கு மனைவி வசந்தா மற்றும் இரண்டாவது மகன் சுரேஷ் குமாரை அவ்வப்போது தாக்கி துன்புறுத்தியும் வந்துள்ளார். தாயும் - மகனும் செய்வதறியாது கொடுமைகளை தாங்கி இருக்கின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்றும் ஜெயராஜ் தனது மனைவி மற்றும் மகனை கொடுமைப்படுத்துள்ளார்.

ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்: இதனால் ஆவேசமான இருவரும் நிதானத்தை இழந்து ஜெயராஜை கொலை செய்தனர். பின் கோபத்தில் நடந்ததை அறிந்து சுதாரித்தவர்கள், காவல் நிலையம் சென்று சரணடைந்தனர். இந்த விஷயம் குறித்து கேட்டறிந்த காவல் துறையினர், தம்பதியின் வீட்டிற்கு வந்து ஜெயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).