Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.!

2017ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த மகனின் நினைவால், தந்தை மகன் இறந்த இடத்திலேயே தனது உயிரையும் மாய்துகொண்ட சோகம் நிலையில் நடந்துள்ளது.

Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

நவம்பர் 24, பாளையங்கோட்டை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலபாக்கியா நகர், 1 வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் ஜெயராம் (வயது 63). இவர் நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்று இருக்கிறார். தனது மனைவி, மகன்களுடன் வசித்து வருகிறார். தம்பதிகளின் ஒரு மகன் நெல்லை நகரில் இருக்கும் வங்கியில், ஊழியராக வேலை பார்த்து வருகிறார். Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..! 

விபத்தில் மறைந்த மகன்:

இன்னொரு மகனான விக்னேஷ் ராஜா, கடந்த 2017ம் ஆண்டு பாளையங்கோட்டை, ரெட்டியார்மலை பகுதியில் இருக்கும் நான்கு வழிசாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மகன் மறைந்த துக்கத்தில் ஜெயராம், அவரின் மனைவி எப்போதும் மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளனர். இவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்ட உறவினர்கள், தம்பதிகளுக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கின்றனர்.

தந்தை விஷம் கடித்து தற்கொலை:

எனினும், தம்பதிகளால் மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் வருத்தத்தில் இருந்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் ஜெயராம் மகன் விபத்தில் உயிரிழந்த பகுதிக்குச் சென்று, மதுவில் விஷம் ஊற்றிக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் விழுந்து கிடந்த நபரை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயராம், சிகிச்சை பலனின்றி நேற்று இரவில் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 24, 2024 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).