Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.!
மூத்த மக்கனை பள்ளிக்கு அனுப்பிய தாய், இளையமகன் வேனின் சக்கரத்திற்கு அருகே நிற்பதை கவனிக்காமல் இருந்ததால் நொடியில் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
டிசம்பர் 14, திருப்பத்தூர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பேரி, குமரன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரின் மனைவி ரம்யா. தம்பதிகளுக்கு பிரித்தீவன், புனிதன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் பிரித்தீவன் அங்குள்ள செயின்ட் மெரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்.
பள்ளிக்கு புறப்பட்ட மூத்த மகன்: தினமும் பள்ளிக்கு மாணவர் பள்ளி வாகனத்தில் சென்று வீட்டிற்கு திரும்புவது வழக்கம். இவர்களின் வீட்டு முன்பே வாகனம் வந்து பிரித்தீவனை அழைத்து செல்லும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல பிரித்தீவன் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார்.
இளையமகனை கவனிக்க தவறிய குடும்பம்: அவரை அழைத்துச்செல்ல பள்ளி வாகனம் வந்த நிலையில், தாய் ரம்யா மகனை வேனிற்குள் ஏற்றி இருக்கிறார். அப்போது, அவரின் இளைய மகனான ஒன்றரை வயதுடைய குழந்தை புனிதன், வேனின் சக்கரத்திற்கு அருகே சென்று நின்றுள்ளார். IND Vs SA T20: அடித்து நொறுக்கிய சூரியகுமார் யாதவ்: அசத்தல் வெற்றி அடைந்த இந்தியா..! சாதனை மேல் சாதனை.!
வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்: இதனை யாரும் கவனிக்கவில்லை. வேன் ஓட்டுநர் பிரித்தீவன் வேனிற்குள் வந்ததும் வாகனத்தை இயக்கவே, சக்கரத்திற்கு அடியில் இருந்த புனிதன் குடும்பத்தினர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வேன் பறிமுதல்: மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, TN83 S 4216 பதிவெண் கொண்ட தனியார் பள்ளி பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுநர் முனியப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Dec 15, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

