Arakkonam Shocker: பூட்டிய வீட்டில் சடலமாக அம்மா, மகன், மகள்.. அரக்கோணத்தில் சோகம்.. தலைமறைவான கணவர்.!

அரக்கோணத்தில் தாய், மகள், மகன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல் துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.

Arakkonam Shocker: பூட்டிய வீட்டில் சடலமாக அம்மா, மகன், மகள்.. அரக்கோணத்தில் சோகம்.. தலைமறைவான கணவர்.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 08, அரக்கோணம் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (Arakkonam), சுவால்பேட்டை, வளர்புரம் பகுதியில் வசித்து வருபவர் விஜயன். இவர் அங்குள்ள நேருஜி நகரில், மருந்தகம் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி மீனாட்சி (45). இவர் அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு பவித்ரா (25) என்ற மகள் இருக்கிறார். இவர் தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில், பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். மகன் யுவனேஷ் (20), தனியார் தொழிற்சாலை ஒன்றில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு நேரத்தில் யுவனேஷ், பவித்ரா, மீனாட்சி ஆகியோர் வீட்டிற்குள் சடலமாக இருப்பதாக, அவர்களின் உறவினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். TVK Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்; நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டம்.!

தாய், மகன், மகள் மரணத்தில் சந்தேகம்:

இந்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அரக்கோணம் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து மூவரின் சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர்-அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன. மேலும், மீனாட்சியின் கணவர் விஜயன், தலைமறைவான இருக்கிறார். இவர்களின் வீட்டில், தங்களின் மரணத்திற்கு யாருமே காரணம் இல்லை என எழுதி வைத்துள்ள கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூவரின் மரண விவகாரத்தில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், விஜயனை கைது செய்தால் உண்மை தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் விஜயனுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது வேறு காரணமா? என விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).