Minor Girl Raped: 13 வயது சிறுமி கர்ப்பம்., 62 வயது பள்ளிப் பேருந்து உதவியாளர் அதிர்ச்சி செயல்.. பெற்றோர்களே கவனம்.!
சிறுமியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறிய முதியவரின் கொடூர செயலால் தற்போது 13 வயதில் சிறுமி கர்ப்பமான சோகம் நடந்துள்ளது. கர்ப்பத்திற்கு பின்னரே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நவம்பர் 16, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு (Cheyyar), வெம்பாக்கம் தாலுகாவுக்குட்பட்ட கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, நேற்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அலறவே, சிறுமியை பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
சிறுமி 2 மாத கர்ப்பம் & பலாத்காரம் (13 Year Old Minor Girl Raped in Tiruvannamalai) உறுதி:
அங்கு சிறுமிக்கு உடல்நல பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், பலாத்காரம் செய்யப்பட்டதால் அவர் கர்ப்பமாகி இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, உறவினர் ஒருவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலமானது. Special Bus for Sabarimala: ஸ்ரீ ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விபரம் இதோ.!
62 வயது முதியவரின் கொடூர செயல்:
தம்பதிகளின் உறவினரான நாகராஜன் (வயது 62) என்பவர், சட்டுவந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் பள்ளி பேருந்தில் உதவியாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை கொண்ட நிலையில், அப்போது பலாத்கார துயரமும் அரங்கேறி இருக்கிறது. இவ்வாறாக பலமுறை நாகராஜனால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது அம்பலமானது. இதனால் தற்போது அவர் கர்ப்பமாகியுள்ளார்.
போக்ஸோவில் கைது:
மகளிடம் உண்மையை கேட்டறிந்த பெற்றோர், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தில் நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நாகராஜன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பெற்றோர் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கேட்டு, அவர்களின் நடத்தையில் மாற்றம் இருந்து கண்காணித்து இருந்தால் முன்னதாகவே கயவன் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

