Trichy News: அனுதினமும் சித்ரவதை, டார்ச்சர்.. இளைஞரை கொன்ற மாமியார்-மருமகள்.. திருச்சியில் அதிரவைக்கும் சம்பவம்.!
ஒவ்வொரு நாளும் போதையில் வந்து தகராறு செய்த மகனை, தனது மருமகளுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம் திருச்சியை அதிரவைத்துள்ளது. போதை அதனை குடிப்பவனை மட்டுமல்லாது, அவனின் குடும்பத்தையும் சீரழித்து இருக்கும் சோகம் மனதை பதறவைத்துள்ளது.
நவம்பர் 22, திருச்சி (Trichy News): திருச்சி (Trichy Crime News) மாவட்டத்தில் உள்ள சஞ்சீவி நகர், வாடாமல்லித் தெரு பகுதியில் வசித்து வருபவர் காமாட்சி. இவரின் மகன் குணா என்ற குணசேகரன். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த குணா, மது & கஞ்சா போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி, தாய் ஆகியோரை அவதூறாக பேசி, தாக்குவதை தொடர்கதையாக்கி இருக்கிறார்.
தற்கொலை நாடகம்:
இதனிடையே, சம்பவத்தன்று இரவும் வழக்கம்போல கஞ்சா, மது போதையில் வீட்டிற்கு வந்த குணா போதையில் தாய், மனைவியை ஆபாசமாக வசைபாடிவிட்டு, பின் உறங்கி இருக்கிறார். மறுநாள் காலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் விலகிய மர்மம்:
மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குணாவின் கழுத்துகளில் நகக்கீறல் காயம் இருந்ததாகவும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதால் மரணம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் குணாவின் தாய் காமாட்சி, குணாவின் மனைவி சுலோச்சனா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குணாவின் கொலையில் இருந்த மர்மம் விலகியது. Gold Silver Price: ரூ.58,000/-ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு..!

போதையில் தாக்குதல்:
அதாவது, கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான குணா தினமும் வீட்டிற்கு வந்து தாய், மனைவியை ஆபாசமாக பேசி தாக்கிவிட்டு, பின் உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் மாமியார்-மருமகள் இருவரும், தங்களின் உறவினர்களான திருநங்கை நித்தியா, விக்கி ஆகியோரிடம் குணாவின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளனர். திருநங்கைகள் குணாவை திரைப்பட பாணியில் கொலை செய்திடலாம் என திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளனர். இவர்களின் திட்டத்திற்கு தயாராக காத்திருக்க, சம்பவத்தன்றும் போதையில் வந்த குணா மனைவி, தாயை தாக்கி தகராறு செய்துள்ளார்.
கொடூர கொலை:
இதனையடுத்து, போதையில் குணா உறங்கியதும் விக்கி, நித்தியாவுக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அங்கு துப்பட்டா கொண்டு குணாவின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது. பின் குணாவின் உடலில் வெற்று ஊசி நரம்பில் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலையை மறைக்க மாமியார்-மருமகள் நாடகமாடிய நிலையில், பிரேத பரிசோதனையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

