Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.!
லாரி ஓட்டுனரின் அலட்சியமான செயலால் 3 வயது சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் திண்டிவனம் அருகே நாடடைந்துள்ளது. தந்தையுடன் பயணித்த சிறுவனின் உயிர் நொடியில் பிரிந்ததை விளக்குகிறது இந்த் செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 28, திண்டிவனம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் (Mailam), எட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவா (வயது 45). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். சிவாவின் மனைவி ராதிகா (வயது 35). தம்பதிகளுக்கு மனுநீதி (வயது 6), தேவ விருதன் (வயது 3) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று காலை நேரத்தில் சிவா தந்து இரண்டு குழந்தையுடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் மூத்த சகோதரி வீட்டிற்கு ஹலோ பிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டிராக்டரில் எடப்பாளையத்தில் இருந்து பயணத்தை (3 Aged Minor Boy Died in Accident) தொடங்கியுள்ளார். இவருடன் அவரின் இரண்டு குழந்தைகளும் பயணம் செய்துள்ளனர். Aval Kesari Recipe: சுவையான அவல் கேசரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்: டிராக்டர் திருச்சி - சென்னை (Trichy Chennai National Highway) தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கூட்டேரிப்பட்டு மேம்பாலம் பகுதியில் வந்தபோது, டைரக்டருக்கு பின்னால் வந்த லாரி டிராக்டரின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிராக்டர் சில அடி தூரம் வேகமாக நகர்ந்தது. சிவா டிராக்டரை கட்டுக்குள் கொண்டுவந்து, லாரி ஓட்டுனரை கடுமையாக கண்டித்தார். பின் டிராக்டரில் இருந்த இளையமகனை பார்த்தபோது, அவர் காணவில்லை. குழந்தையை பதறியபடி தேடியபோது லாரியின் டயரில் சிக்கி சிறுவன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். குழந்தையை மீட்ட சிவா, உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தார்.
அங்கு நடந்த பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மயிலம் காவல் துறையினர், லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். அத்தை வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த சிறுவன், நடுவழியில் விபத்தில் சிக்கி தந்தையின்முன் உயிரிழந்த சோகம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

