Young Man Murdered: தங்கையை காதலித்து கரம்பிடித்ததால் ஆத்திரம்; 8 மாதம் காத்திருந்து மச்சானின் கதைமுடித்த கொடூரம்..!

மனங்களை பார்த்தும் எழும் காதலுக்கு இன்றளவும் இருக்கும் எதிர்ப்பு காரணமாக நடக்கும் கொடூர kolaigal நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளன.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

ஜூலை 25, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur), இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரின் மகன் கார்த்திக் பாண்டி (வயது 26). இவர் சிவகாசி (Sivakasi) பகுதியில் செயல்பட்டு வரும் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அச்சமயம், அதே பகுதியில் செயல்பட்டு வரும் வேறொரு கடையில் சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (வயது 22) என்பவரோடு நட்பாக பழகி இருக்கிறார்.

காதலித்து திருமணம்:

இந்த நட்பானது பின்னாளில் இவர்களுக்கிடையே காதலை மலரவைக்கவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். பின் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் (Love Married Youth Killed) செய்துகொண்டு, அய்யம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். Young Man Dies: வேட்டை துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு; நண்பர்கள் இருவர் கைது..!

சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்:

இதனிடையே, நேற்று இரவு சுமார் 09:20 மணியளவில் நந்தினியை தன்னுடன் அழைத்துச்செல்ல கார்த்திக் பாண்டி வந்தார். அச்சமயம் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கார்த்திக் பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்து அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனைக்கண்டு அலறிய நந்தினியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை தீவிர விசாரணை:

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், நந்தியின் சகோதரரான பாலமுருகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கையை காதல் திருமணம் செய்த பாண்டியை கொலை செய்தது உறுதியானது.

குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.