TN Weather Update: அப்படிப்போடு... 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தேனி, தென்காசி, திண்டுக்கல், கோவை உட்பட பல மாவட்டங்களிலில் இன்றும்-நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain (Photo Credit: Pixabay)

ஜூன் 22, புதுடெல்லி (New Delhi): தமிழ்நாட்டில் வரும் 3 நாட்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது இருந்தது. இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு விடப்பட்ட அதிக கனமழை எச்சரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையம், நாளைய வானிலை அறிவிப்பில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்:

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டுக்கு விடுத்துள்ள மழைக்கான முன்னறிவிப்பு செய்திக்குறிப்பில், "இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் அதிக மழை பெய்யலாம். அதேபோல, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. Benedict Cumberbatch: அவஞ்சர்ஸ் 5ம் பாகத்தில் பெனெடிக்ட் நடிப்பது உறுதி: அவரே கூறிய தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! 

அதேபோல், 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றும், நாளும் ஒருசில இடங்களில் கல்மாலை முதல் மிதமான மழை பெய்யும். பருவமழை வலுப்பெற்று இருப்பதால், வடகடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. இடி-மின்னலுடன் மழை பெய்ய சாத்தியக்கூறுகள் அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.